×

பொதுமக்கள் குறைதீர் முகாம் எஸ்.பி.யிடம் 15 பேர் மனு

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அரியலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 15 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எதிர்காலத்தைக் கட்டமைக்கும் வலிமை கொண்டவர்களாக விளங்கும் மாணவ, மாணவிகளாகிய நீங்கள் லஞ்சம் வாங்குவது குற்றம் என்பதை உணர்ந்தவர்களாக, மற்றவர்களுக்கும் உணர்த்துபவர்களாக இருக்க வேண்டும்.

The post பொதுமக்கள் குறைதீர் முகாம் எஸ்.பி.யிடம் 15 பேர் மனு appeared first on Dinakaran.

Tags : Camp S. B. ,Ariyalur ,Ariyalur District Police ,Superintendent ,Peroskan Abdullah ,Tamil Nadu Police ,Dinakaran ,
× RELATED வங்கி கடனுதவிக்கும் ஏற்பாடு: புதிய தொழில் முனைவோராக பயிற்சி