×

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி, நவ. 2: தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 8 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 55 மனுதாரர்கள் என மொத்தம் 63 மனுதாரர்கள் தங்கள் குறைகளை போலீஸ் எஸ்பியிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எஸ்பி உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin SP ,Thoothukudi ,SP ,Balaji Saravanan ,Tuthukudi ,Tamil Nadu ,Tuticorin ,SP Office ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீசாரின் கவாத்து பயிற்சி