×

மேல்புறம் மேற்கு வட்டார காங். சார்பில் இந்திரா காந்தி நினைவு தினம்

மார்த்தாண்டம், நவ.2 : மேல்புறம் மேற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவுதினம் மருதங்கோடு சந்திப்பில் நடந்தது. வட்டார காங்கிரஸ் தலைவர் ரவிசங்கர் தலைமை வகித்தார். ஊராட்சி காங்கிரஸ் தலைவர்கள் ஜெஸ்டின், புஷ்பாகரன், ரதிஸ் குமார், எட்வின் ராஜ், வழக்கறிஞர் ரதிஸ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் பினில் முத்து, மகிளா காங்கிரஸ் மாநில துணை தலைவர் லைலா ரவிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர் சாலின், சுஜின்குமார், அம்பிளி, நிர்வாகிகள் பாப்பா, மஞ்சு பிரியா, உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மேல்புறம் மேற்கு வட்டார காங். சார்பில் இந்திரா காந்தி நினைவு தினம் appeared first on Dinakaran.

Tags : Upper West Regional Kong ,Indira Gandhi Memorial Day ,INDRA GANDHI MEMORIAL ,MARUTHANG ,UPPER WEST DISTRICT ,Western Regional Kong ,Dinakaran ,
× RELATED கம்பத்தில் இந்திரா காந்தி நினைவுதினம் அனுசரிப்பு