×

கிரஷர் லாரிகளில் தார்ப்பாய் கட்டாயம்

பல்லடம்: பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகை கானும் பொதுமக்கள் வரவேற்கின்றனர். பல்லடம் வட்டாரத்தில் கோடங்கிபாளையம், வேலம்பாளையம், சாமளாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில், 30க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கிரஷர் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் எம் சாண்ட் ஜல்லி கற்கள், எம் சாண்ட் உள்ளிட்டவை லாரி உரிமையாளர்கள் டிப்பர் லாரிகள் மூலம் ஏற்றி கோவை, திருப்பூர், பல்லடம் சூலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அப்போது லாரிகளில் இருந்து கீழே விழும் ஜல்லிக்கற்கள், துகள்கள் உள்ளிட்டவை வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்ப்பதுடன் சாலைகளில் செல்லும் போது விபத்து அபாயமும் ஏற்படுகிறது. இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், காரணம்பேட்டை கல்குவாரி கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகைகளில் கூறியிருப்பதாவது:

The post கிரஷர் லாரிகளில் தார்ப்பாய் கட்டாயம் appeared first on Dinakaran.

Tags : Palladam ,Khan ,Crusher Owners Association ,Fakampet ,Dinakaran ,
× RELATED பல்லடம் பெரியாயிபட்டி கிராமத்தில்...