×

லஞ்ச ஒழிப்பு துறை வழக்கில் விடுவிக்கப்பட்ட வழக்கை ஐகோர்ட் விசாரிக்கும்: அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பிடம் ஆவணங்கள் வழங்கப்பட்டது

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, கடந்த 2008ம் ஆண்டு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.பெரியசாமி சார்பில் வழக்கறிஞர் இ.வி.சந்துரு ஆஜராகி, இந்த வழக்கின் நோட்டீஸ் தங்களுக்கு கிடைத்துவிட்ட நிலையில் வழக்கின் ஆவணங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்றார்.இதையடுத்து, வழக்கின் ஆவணங்களை வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்கு ஆவணங்கள் அமைச்சர் தரப்புக்கு வழங்கப்பட்டது. அடுத்த விசாரணை நவம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

The post லஞ்ச ஒழிப்பு துறை வழக்கில் விடுவிக்கப்பட்ட வழக்கை ஐகோர்ட் விசாரிக்கும்: அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பிடம் ஆவணங்கள் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : ICOURT ,BRIBERY DEPARTMENT ,Beryasamy ,Chennai ,Former Minister ,Tamil Nadu Housing Welfare Board ,I. Beryasamy ,Minister ,Peryasami ,
× RELATED காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை: ஐகோர்ட் கருத்து