×

மீனவரிடம் ரூ.2,500 லஞ்சம் விஏஓ கைது

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூரை சேர்ந்தவர் விஜய் (44). மீனவரான இவர், பட்டா பெயர் மாற்றம் மற்றும் சிறு விவசாயிக்கான சான்று பெற விண்ணப்பம் செய்திருந்தனர். இதற்காக பொறையாறு (பொ) விஏஓ பாண்டியராஜன் (30), ரூ.2,500 லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி விஜய், மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் ஆலோசனையில் பேரில் ரசாயனம் தடவிய 2,500 ரூபாயுடன் பொறையாறு விஏஓ அலுவலகத்துக்கு நேற்று சென்று விஏஓ பாண்டியராஜனிடம் பணத்தை கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த போலீசார், விஏஓவை கைது செய்தனர்.

The post மீனவரிடம் ரூ.2,500 லஞ்சம் விஏஓ கைது appeared first on Dinakaran.

Tags : VAO ,Tharangambadi ,Vijay ,Guttiandyur ,Mayiladuthurai district ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!