×

வக்பு வாரிய இணையதள சேவை தொடக்கம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

சென்னை: வக்பு வாரிய நிறுவனங்களுக்கு பெருமராமத்து மானியம், உலமா ஓய்வூதிய ஆணை வழங்கும் மற்றும் வக்பு வாரிய இணையதள சேவையை சிறுபான்மைத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வக்பு வாரியம் பொதுமக்களின் மனுவினை இணையதள வாயிலாக பெறுவதற்கும், உலமா ஓய்வூதியம் பெற விண்ணப்பம் பெறுவதற்கும், வக்பு நிறுவனங்களின் முத்தவல்லிகள் வக்பின் கணக்குகளை சமர்ப்பிக்கவும் மற்றும் சகாயத் தொகையினை இணையதளத்தின் மூலம் செலுத்துவதற்கும் இத்தளம் உதவும். இதன் முகவரி: www.tnwb.tn.gov.in இந்நிகழ்வில், துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான், முதன்மை செயல் அலுவலர் ஜெய்னுலாப்தீன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post வக்பு வாரிய இணையதள சேவை தொடக்கம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Waqf Board Web Service ,Minister ,Senji Mastan ,CHENNAI ,Waqf Board ,Waqf Board Institutions ,Ulama Pension Ordinance ,Wakf Board Web Service ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...