×

அரையிறுதியில் பெகுலா

காங்கூன்: டபுள்யுடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா முதல் முறையாக தகுதி பெற்றுள்ளார். மெக்சிகோவின் காங்கூன் நகரில் நடந்து வரும் இந்த தொடரின் பாகலர் பிரிவு லீக் ஆட்டத்தில் நம்பர் 1 வீராங்கனை அரினா சபலென்காவுடன் (25 வயது, பெலாரஸ்) மோதிய ஜெசிகா பெகுலா (29 வயது, 5வது ரேங்க்) 6-4, 6-3 என நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். டபுள்யுடிஏ பைனல்ஸ் தொடரின் அரையிறுதிக்கு அவர் முதல் முறையாக முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி 1 மணி, 28 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

The post அரையிறுதியில் பெகுலா appeared first on Dinakaran.

Tags : Pegula ,Cancun ,Jessica Pegula ,WUTA Finals tennis ,Dinakaran ,
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஜெஸிகா பெகுலா