×

மாலத்தீவு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிப்பு

மாலே: மாலத்தீவு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல் பாக்கியராஜ். இவரது படகில் அதே ஊரைச் சோ்ந்த மைக்கேல்ராஜ், மகேஷ்குமாா் பரமசிவம், ஆதிநாராயணன், வேம்பாரைச் சோ்ந்த அதிசய பரலோக திரவியம், அந்தோணி செல்வசேகரன் பரலோக பிரான்சிஸ், அந்தோணி அன்சல் கிறிஸ்டோபா், சிலுவைப்பட்டி அன்புசூசை மிக்கேல், ராமநாதபுரம் மணி, சக்தி, ராமேஸ்வரம் உதயகுமாா், விக்னேஷ், மதுரை மாதேஷ்குமாா் துரைப்பாண்டி ஆகிய 12 பேரும் கடந்த 1ம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு 23ம் தேதி மாலத்தீவு கடல் வழியாக கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனராம்.

அப்போது, அத்துமீறி தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி, 12 பேரையும் மாலத்தீவு கடற்படையினா் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதனிடையே மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் பறிமுதல் செய்த விசைப்படகை விடுவிக்க மாலத்தீவு அரசு மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. தமிழ்நாடு மீனவர்களின் படகுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாலத்தீவு எல்லைக்குள் மீன்பிடித்ததாக 2 லட்சம் ரூபியா, வலை உபயோகித்து மீன்பிடித்ததாக 20 லட்சம் ரூபியா, உரிமம் இல்லாமல் கடல் பகுதியில் இருந்ததாக 20 லட்சம் ரூபியா என மொத்தமாக, இந்திய மதிப்பில் 2,27,43,190 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரூ.2 கோடி அபராதம் செலுத்தினால் மட்டுமே படகை விடுவிக்க முடியும் என மாலத்தீவு அரசு நிபந்தனை விதித்துள்ளது. மாலத்தீவு அரசின் நிபந்தனையால் ஊர் திரும்ப முடியாமல் தருவைகுளம் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

The post மாலத்தீவு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Maldivian Navy ,Thoothukudi Daruwaikulam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மின் வாரியத்தில் காலி...