×

புற்றுநோய்க்கு தமிழ் திரைப்பட இயக்குனர் பலி

சென்னை: கடந்த 1992ல் பார்த்திபன், சுமா ரங்கநாத், மோகினி நடிப்பில் வெளியான படம் ‘உன்னை வாழ்த்தி பாடுகிறேன்’. இதை ஸ்ரீதேவ் என்ற பெயரில் இயக்கியவர் சி.வி.சசிகுமார். பிறகு 1996ல் அர்ஜூன், மீனா, ரம்பா நடிப்பில் வெளியான படம் ‘செங்கோட்டை’. இதை சி.வி.சசிகுமார் என்ற பெயரிலேயே இயக்கினார். தொடர்ந்து தெலுங்கில் 2 படங்களும், தமிழில் டி.வி தொடரும் இயக்கியுள்ள அவர், சில வருடங்களாக தொண்டை புற்றுநோய் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சி.வி.சசிகுமார் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஏற்கனவே அவருக்கு இதய நோயும் இருந்ததால், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 2 மணியளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57. திருமணமாகி விட்டது. மறைந்த சி.வி.சசிகுமாரின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது. …

The post புற்றுநோய்க்கு தமிழ் திரைப்பட இயக்குனர் பலி appeared first on Dinakaran.

Tags : Bali ,Chennai ,Parthiban ,Suma Ranganath ,Mohini ,Sridev ,
× RELATED சாலையில் மயங்கி கிடந்தவர் பலி