சென்னை: பாஜக, ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திட மறுப்பதற்கு அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முனைவர் பட்டம் வழங்கும் அதிகாரம் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவைக்கு உள்ளது என்று பல்கலை. சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. பதிவாளர், சிண்டிகேட் உறுப்பினர்கள் அனைவருமே ஆளுநரை நேரில் சந்தித்து சங்கரய்யாவுக்கு முனைவர் பட்டம் நர கோரினர்.
தமிழ்நாடு அரசு அறிவித்த தகைசால் விருது முதல்முறையாக சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் சங்கரய்யாவின் பங்கு பற்றி ஆளுநர் அறிந்து கொண்டு ஒப்புதல் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்த தகைசால் விருது முதல்முறையாக சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவருக்கும் உதவுவதுதான் திமுக திராவிட மாடல் அரசு. சுதந்திர போராட்ட வீரர்கள் மீது ஆளுநருக்கு பெரிய அக்கறை உள்ளதா? அக்கறை இருந்தால் சங்கரய்யாவுக்கு முனைவர் பட்டம் வழங்க வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரையாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுத்திருக்கிறார். ஆளுநருக்கு தமிழ்நாடு வரலாறு பற்றி எதுவும் தெரியவில்லை.
ஆர்.எஸ்.எஸ்.ல் இருந்து வந்தவர்களுக்கு சுதந்திர போராட்டத்தின் மதிப்பு தெரியாது என்பதை ஆளுநரின் செயல்பாடு உணர்த்துகிறது. தினமும் பொய் சொல்வதையே தனது தொழிலாக கொண்டுள்ளார் ஆளுநர். அமெரிக்காவில் உள்ள ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், இந்தியாவில் உள்ள ஆளுநர் மக்களால் தேர்வானவர்கள் அல்ல. இதைவிட மோசமான ஆளுநர் இருந்தது இல்லை. சங்கரையா பற்றி தெரியவில்லை என்றால் கேட்டு அறிந்திருக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.
The post பாஜக, ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்: அமைச்சர் பொன்முடி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
