×

ரூட் தல விவகாரம்: 30 மாணவர்களை நிரந்தரமாக நீக்க மாநில கல்லூரிக்கு ரயில்வே போலீஸ் கடிதம்

சென்னை: ரூட் தல விவகாரத்தில் 30 மாணவர்களை நிரந்தரமாக நீக்க மாநில கல்லூரி முதல்வருக்கு ரயில்வே போலீஸ் கடிதம் அனுப்பியுள்ளது. ரயில் நிலையங்களில் ரூட் தல பிரச்சனையால் தொடர்ந்து மோதல் சம்பவங்களில் ஈடுபட்ட 30 பேரை கல்லூரியில் இருந்து நீக்க கடிதம் எழுதியுள்ளது.

ரூட் தல பிரச்சனை காரணமாக கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயில்களிலும் மோதிக்கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ரயில்வே போலீசார் கடந்த 2 ஆண்டுகளில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 44 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் மோதல் சம்பவத்திற்கான மாணவர்களின் பட்டியலை ரயில்வே போலீசார் தயாரித்துள்ளனர்.

அதனடிப்படையில் 30 மாநில கல்லூரி மாணவர்களை கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய வேண்டும் என்று ரயில்வே போலீசார் மாநில கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். 30 மாணவர்களும் பல்வேறு மோதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய மாணவர்களும்ள் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இவர்களை கலோரிகளிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என 30 மாணவர்கள் குறித்த பட்டியலை மாநில கல்லூரி முதல்வருக்கு கடிதமாக அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து தற்போது, மாணவர்களை உடனடியாக கல்லூரியில் இருந்து நிரந்தர நீக்கம் செய்ய முடியாது என மாநில கல்லூரி முதல்வர் விளக்கமளித்துள்ளார். ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்குப் பிறகே மாணவர்களை நிரந்தரமாக நீக்க முடியும், மாநில கல்லூரி மாணவர்கள் மீதான எஃப்.ஐ.ஆர். நகல் வந்த உடனே சம்பந்தப்பட்ட மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவர், இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவருக்கு வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post ரூட் தல விவகாரம்: 30 மாணவர்களை நிரந்தரமாக நீக்க மாநில கல்லூரிக்கு ரயில்வே போலீஸ் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Railway police ,Chennai ,Principal of the ,State ,College ,State College ,Dinakaran ,
× RELATED மதுரையில் தண்டவாளத்தை குண்டு வைத்து...