×

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். 10.5% இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தக் கோரி பாமக தலைவர் அன்புமணி முதல்வரை சந்தித்திருந்தார். சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதிப்பதை எதிர்த்து நேற்று தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்திருந்தது. தமிழ்நாடு அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். இடஒதுக்கீடு தொடர்பாக சட்டரீதியாக அணுகுவது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளிடம் முதலமைச்சர் கருத்து கேட்கிறார்.

The post வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Vanniyars ,Chennai ,M.K.Stalin ,Chennai Chief Secretariat ,
× RELATED பத்மநாபபுரம் தொகுதி முன்னாள்...