×

மகாராஷ்டிராவில் மராத்தா இன மக்களின் இடஒதுக்கீடு போராட்டத்தில் வெடித்த வன்முறை; மாநிலம் முழுவதும் பதற்றம்

மும்பை: மகாராஷ்டிராவில் இதர பிற்படுத்தபட்ட பிரிவை சேர்ந்த மராத்தா இன மக்களுக்கு 16 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஏக்நாத் ஷிண்டே அரசு ஏற்றியது. ஆனால், இந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால் சில நாட்களுக்கு முன்பு போராட்டம் வெடித்தது. 40 நாட்களுக்குள் தீர்வு கானப்படும் என்றும் மாநில அரசு உறுதியளித்தும் எந்த தேர்வும் எட்டாததால் மராத்தா மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனிடையே மரத்வாடா பகுதியில் உள்ள ஜன்னா மாவட்டத்தில் இணையசேவைகள் நேற்று துண்டிக்கபட்டன.

வன்முறை பற்றி எரியும் மாவட்டங்களான பர்பாலி, தாராஷூ, ஜன்னா உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் முழுவதும் ரத்து செய்யபட்டன. மராத்வாடா பகுதியில் 5 மாவட்டங்களும், மேலும் சில பகுதிகளும் வன்முறையால் பாதிக்கபட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்ந்து 3-வது நாளாக நேற்று மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. சத்ரபதி சம்வாஜி நகரில் பாஜக எம்.எல்.ஏ கிருஷாண்பம் அலுவலகம் தீக்கிரையாக்கபட்டது. அதே போல் மரத்வடா பகுதியில் பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகளும் கல்வீசி தாக்கபட்டுள்ளன. கல்வீச்சு தாக்குதலில் எஸ்.பி ஸ்ரீகிருஷ்ணா கோக்கடே காயமடைந்துள்ளார்.

மராத்தா போராட்டத்தை ஆதரித்து சிவசேனா ஷிண்டே தரப்பில் 2 எம்.பி.க்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், மேலும் 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யவதாக அறிவித்துள்ளதால் மராட்டிய அரசியலில் நெருக்கடி ஏற்பட்டுள்ளத்து. இந்நிலையில், இந்த பிரச்சனைக்கு நாடாளுமற சிறப்பு கூட்டத்தொடர் நடத்தி ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும் என முன்னால் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.

The post மகாராஷ்டிராவில் மராத்தா இன மக்களின் இடஒதுக்கீடு போராட்டத்தில் வெடித்த வன்முறை; மாநிலம் முழுவதும் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,MUMBAI ,AKNAH ,MARATHA ,
× RELATED மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர்...