×

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது. 18 அடி உயரமுடைய ஆஞ்சநேயரை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழில் வேத மந்திரங்கள் ஒலிக்க ஆஞ்சநேயருக்கு நன்னீராட்டு செய்யப்பட்டது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

நாமக்கல் நகரின் மையப்பகுதியில், ஒரே கல்லில் உருவான, 18 அடி உயர சிலையுடன் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, நின்ற நிலையில் வணங்கியபடி, ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தற்போது, ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம், 64.60 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, 4 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை, 8:00 மணிக்கு, மகாசாந்தி மற்றும் அதிவாச ஹோமம், தமிழ் ப்ரபந்த் சமர்பணம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

இன்று காலை, 9:10 மணிக்கு, யாத்ராதானம், கும்பப்ரயாணம், 10:00 மணிக்கு, திருக்குட நன்னீராட்டு பெருவிழா, மகா சம்ப்ரோஷணம் கோலாகலமாக நடந்தது. நாமக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த, 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 105 ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

The post நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : UMBRELLA CEREMONY ,NAMAKAL ANJANEYAR TEMPLE ,NAMAKKAL ,Anchaneyer ,Kumarukku ,Namakkal Anjaneyar Temple ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...