×

இந்திராகாந்தி நினைவுதினம் காங்கிரஸ் ரத்ததான முகாம்

திண்டுக்கல், நவ.1: முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 39வது நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட மாநகர இளைஞர் காங்கிரஸ் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்திரா காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் உள்ள திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட மாநகர காங்கிரசார் மற்றும் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரசார் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்திரா காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு 50க்கும் மேற்பட்ட காங்கிரசார் ரத்த தானம் செய்தனர். திண்டுக்கல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது அலியார் மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமில் மாவட்டம் மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், திண்டுக்கல் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், அப்துல் ரகுமான், அமீர் அம்ஜா, வேங்கை ராஜா, அப்பாஸ் மந்திரி, வரதராஜன், மதுரை வீரன், காஜாமைதீன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.

The post இந்திராகாந்தி நினைவுதினம் காங்கிரஸ் ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Tags : Indira Gandhi Memorial ,Day Congress ,Dindigul ,Indira Gandhi ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...