×

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம்

 

நிலக்கோட்டை, நவ. 1: திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் எஸ்பி.செல்வராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் பூங்கொடி முருகு முன்னிலை வகித்தார். திமுக பேரூர் செயலாளரும் கவுன்சிலருமான விஜயக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் அடிப்படை பணிகளை செய்வதற்கு தமிழக அரசு தொடர்ந்து நிதிகளை வாரி வழங்கி வருகிறது.

இதனால் பாரபட்சமின்றி அனைத்து வார்டுகளிலும் அனைத்து அடிப்படை பணிகளும் செய்து தரப்படும். குறைந்தபட்சம் நமக்கு நாமே திட்டத்தின் மூலமாவது அனைத்து பணிகளும் போர்க்கால அடிப்படையில் செய்து தரப்படும் என கூறினார். மேலும் இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் மாரியப்பன், முகமதுநசீர், கருணாகரன், செல்வி, கவிதா மற்றும் காசியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் முதன்மை எழுத்தர் அசோகன், தூய்மை பணி மேற்பார்வையாளர் அசோக்குமார் உட்பட அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

The post அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ammaiyanayakanur Borough Councilors Monthly Meeting ,Nilakottai ,Dindigul District ,Ammayanayakanur Municipality ,SP. Selvaraj ,Ammayanayakanur Borough ,Dinakaran ,
× RELATED சென்னை ரயிலை கவிழ்க்க சதியா?