×

காரமடை பகுதியில் கடும் பனிமூட்டம்

 

மேட்டுப்பாளையம், நவ.1: காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான மருதூர், புங்கம்பாளையம், திம்மம்பாளையம், தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு தோலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடும் மூடுபனி நிலவி வருகிறது.

அதிகாலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டு வரும் நிலையில் கடும் மூடுபனி காரணமாக இதமான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் அருகில் நிற்பவர்கூட தெரியாத அளவிற்கு பனி நிலவி வருகிறது. மேலும், விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஊட்டியைபோல் காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூடுபனி நிலவியதால் இதமான சூழலை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

The post காரமடை பகுதியில் கடும் பனிமூட்டம் appeared first on Dinakaran.

Tags : Karamadai ,Mettupalayam ,Marudhur ,Pungampalayam ,Thimmampalayam ,Thekampatti ,Velliangad ,Tholampalayam ,Dinakaran ,
× RELATED சிறுமுகை பகுதியில் கலைஞரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்