×

மேலூரில் மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மேலூர், நவ.1: மேலூரில் நெடுஞ்சாலை துறை சார்பில் பள்ளி மாணவிகளின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை, நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை, மேலூர் உட்கோட்டம் சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை முன்னிட்டு, பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மேலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி, கோஷங்களை எழுப்பியபடி இதில் கலந்து கொண்டனர்.

மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசு பள்ளி முன்பு துவங்கிய ஊர்வலம், பஸ் ஸ்டாண்ட், பெரியகடை வீதி, செக்கடி வழியாக சென்று திரும்பியது. போக்குவரத்து விதிமுறைகள், விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டுவது, சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து மாணவிகளுக்கு எல்இடி திரையில் விளக்கி கூறப்பட்டது.

மாணவிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்ச்சியில் மதுரை கோட்டபொறியாளர் வரலட்சுமி, மேலூர் உதவி கோட்ட பொறியாளர் பாலமுருகன், இளநிலை பொறியாளர் இந்திரா பிரியதர்ஷினி, உதவி பொறியாளர் காவியா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பொன்னருள், போக்குவரத்து போலீசார், சாலை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மேலூரில் மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Mellore. ,Malur ,Malur. ,Tamil Nadu Highway ,Mellore ,Dinakaran ,
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை