×

திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் குளிர்சாதன வசதியுடன் உடற்கூராய்வு கூடம் அமைக்க வேண்டும்

திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் குளிர்சாதன வசதியுடன் உடற்கூராய்வு கூடம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்காட்டுப்பள்ளியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. சுற்றுவட்டார கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து தான் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விவசாயத்தையே சார்ந்து வாழ்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் விபத்தில் இறப்போர், தற்கொலை செய்து கொள்பவர்கள், பாம்பு கடித்து இறந்து விடுபவர்கள், போன்ற பல்வேறு வகையில் இறப்போறை திருக்காட்டுப்பள்ளி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யும் வகையில் போதிய கட்டிடம் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிபடுகின்றனர். அப்படி இறக்கும் உடலை வைத்து பாதுகாக்க பூதலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத வைப்பறையில் போதிய வசதி இல்லை. மேலும் குளிர்சாதன வசதியும் இல்லை. இதனால் வாடகைக்கு குளிர்சாதன பெட்டியை வாங்கி வைத்து வருகின்றனர். அப்படி இல்லையென்றால் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடற்கூறாய்வு செய்ய வேண்டிய நிலையில் பொதுமக்கள் உள்ளனர். திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கென்று உடற்கூராய்வு செய்ய கூடம் இருந்தால் பொதுமக்கள் இறந்தவர்களின் உடல்களை தூக்கிக்கொண்டு அழையவேண்டிய நிலையிருக்காது. எனவே உரிய அதிகாரிகள் திருக்காட்டுப்பள்ளிக்கு உடற்கூராய்வுகூடம் குளிர்சாதன வசதியோடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் குளிர்சாதன வசதியுடன் உடற்கூராய்வு கூடம் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thirukkattupalli Government Hospital ,Thirukkattupalli ,Thirukkatupally ,Thirukkatupally Government Hospital ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி அருகே இரு கோஷ்டியினர் மோதல்