×

கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு போராட்டம்

கரூர்: கோரிக்கை வலியுறுத்தி கல்லூரி கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வாயில் முழக்க போராட்டம் நடைபெற்றது. கரூர் அரசு கலைக் கல்லூரி முன்பாக நடைபெற்ற இந்த வாயில் முழக்க போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக கருர் கிளை செயலாளர் பார்த்தீபன் தலைமை வகித்தார். அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு பணப்பலன்கள் வழங்கவேண்டும். அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு பேராசிரியர் பணி மேம்பாடு வழங்க வேண்டும். எம்பிஎல், பிஎச்டி பட்டங்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்க போராட்டம் நடைபெற்றது.

The post கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Karur ,College Joint Action Committee ,Karur Govt Kalaik… ,College Teachers Joint Action Committee ,Dinakaran ,
× RELATED வாங்கல் அருகே உயர் ரத்த அழுத்த பாதிப்பால் மயங்கி விழுந்த பெண் பரிதாப பலி