×

சில்லிபாயிண்ட்…

* 2034ம் ஆண்டு ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரை நடத்துவதற்கான முயற்சியில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்த வாய்ப்பு சவுதி அரேபியாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சியாளர் ராப் வால்ட்டர் நியூசிலாந்தை சேர்ந்தவர் என்பதுடன், நியூசிலாந்து-ஏ அணியின் முன்னாள் பயிற்சியாளர் என்பதால், அவரது ஆலோசனைகள் உலக கோப்பையில் இன்று நியூசிலாந்து அணியை சந்திக்கும் தென் ஆப்ரிக்க அணிக்கு சாதகமாக இருக்கும்.

* உலகின் சிறந்த இளம் கால்பந்து வீரருக்கான ‘கோபா’ டிராபி இங்கிலாந்து மற்றும் ரியல் மாட்ரிட் அணி நடுகள வீரர் ஜூட் பெல்லிங்காமுக்கு (20 வயது) வழங்கப்பட்டுள்ளது.

* உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து கடைசி இடத்தில் பின்தங்கியிருப்பதுடன் அரையிறுதி வாய்ப்பையும் கோட்டைவிட்டதால், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. எனினும், ‘இந்த இக்கட்டான சமயத்தில் அணியை வழிநடத்துவதற்கு ஜாஸ் பட்லரை விட்டால் வேறு யாரும் இல்லை’ என்று முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்டீவன் ஃபின் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து இதுவரை விளையாடி உள்ள 6 லீக் ஆட்டங்களில் 1 வெற்றி, 5 தோல்வியுடன் 2 புள்ளிகள் மட்டுமே பெற்று 10வது இடத்தில் உள்ளது.

The post சில்லிபாயிண்ட்… appeared first on Dinakaran.

Tags : Sillypoint… ,Australia ,FIFA World Cup football ,Sillypoint ,Dinakaran ,
× RELATED சில்லிபாயின்ட்..