×

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொடுப்பதில், கர்நாடகாவில் இதுவரையில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்ததில்லை. கர்நாடக அரசு இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது. ஏதோ ஒரு எதிரி நாட்டுடன் மோதுவது போல நினைக்கின்றனர். அல்லது தமிழகம் ஏதோ அவர்களிடம் சலுகை கேட்பது போல கருகின்றனர். தமிழகதிற்க்கு வழங்க வேண்டிய 140 டி.எம்.சியில், பதில் வெறும் 56.4 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை ஒரு மாநில அரசு மதிக்காமல் நடப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக செயல்படுகிறது. ஜூன் முதல் இதுவரை கர்நாடகா 54 டிஎம்சி மட்டுமே தந்துள்ளது. 83.6 டிஎம்சி பற்றாக்குறை உள்ளது. ஒழுங்காற்று குழுவிடம் 13,000 கன அடி கேட்டோம். அவர்கள் 2,600 கன அடி பரிந்துரைத்துள்ளார்கள். ஆளுநரின் அரசியல் விளையாட்டை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது சரியல்ல. காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசு எதிரி போல் நடந்து கொள்வதாகவும், வரும் 3-ஆம் தேதி கூட உள்ள காவிரி மேலாண்மை குழு கூட்டத்தில் 16 ஆயிரம் கன அடி தண்ணீர் தர வலியுறுத்தப்படுமென்றும், இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது” என்றார்.

The post காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Karnataka government ,Supreme Court ,Kaviri ,Tamil Nadu ,Minister Duraimurugan ,Chennai ,Tamil Nadu Water Department ,Dinakaran ,
× RELATED காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு...