×

வெள்ளரிக்காய் மசாலா ரொட்டி

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – 1
கோதுமை மாவு – 1 கப்
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 3
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும் வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, துருவிய வெள்ளரிக்காய், கொத்தமல்லி தழை, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும். இப்போ சூடான ரொட்டியுடன் உங்க விருப்பத்துக்கேத்தபடி சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிடுங்க.

The post வெள்ளரிக்காய் மசாலா ரொட்டி appeared first on Dinakaran.

Tags :
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்