×

தமிழகத்தில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!!

சென்னை: அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாநில அரசே கலந்தாய்வு நடத்த முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு இன்று முதல் நவ.7 வரை கலந்தாய்வு நடைபெறும். மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நவ.7 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என மருத்துவத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 16 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன. மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுமாறு தேர்வுக்குழு செயலாளர் அருணலதா அறிவுறுத்தியுள்ளார். அகில இந்திய ஒதுக்கீட்டில் 16 மருத்துவ இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 50 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளது. இதேபோல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 மருத்துவ இடங்கள், தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சுயநிதி கல்லூரிகளில் 17 மருத்துவ இடங்கள் என 86 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன.

The post தமிழகத்தில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,India ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...