×

குஜராத்தில் ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு; பார்வையாளர்களை மிரள வைத்த பெண் கமாண்டோக்களின் சாகசம்..!!

காந்திநகர்: தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி குஜராத்தில் உள்ள எக்டா நகரில் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 148வது பிறந்த தினம், தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு குஜராத்தின் எக்டா நகரில் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒற்றுமை தினத்தில் சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு இடம் பெற்றிருந்தது.

துணை ராணுவ படையில் உள்ள பெண் கமாண்டோக்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அரங்கில் இருந்தவர்களை மிரள வைத்தனர். முன்னதாக சர்தார் பட்டேலின் ஒற்றுமை சிலையை பார்வையிட்ட பிரதமர் மோடி, அவர் பிறந்த தினத்தையொட்டி மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஒற்றுமை தினத்தின் ஒருபகுதியாக ஒன்றிய அரசின் சார்பில் பல்வேறு இடங்களில் ஒற்றுமை ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

டெல்லி மேஜர் தியான் சந்த் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்து துவங்கி வைத்தார். முன்னதாக பட்டேல் சவுக்கில், பட்டேல் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

The post குஜராத்தில் ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு; பார்வையாளர்களை மிரள வைத்த பெண் கமாண்டோக்களின் சாகசம்..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Unity Day ,Gujarat ,Gandhinagar ,National Unity Day ,Etta Nagar, Gujarat ,Iron Man ,India ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...