×

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் இதுவரை வடகிழக்கு பருவமழை 43 சதவீதம் குறைவாக பெய்துள்ளது: பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டில் இதுவரை வடகிழக்கு பருவமழை 43 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று இந்திய வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலச்சந்திரன், இவ்வாண்டில் இதுவரை 171 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 98 மி.மீ. மழை பெய்துள்ளது என்றார்.

9-வது முறையாக அக்டோபர் மாதம் மழை குறைவு:

123 ஆண்டுகளில் 9-வது முறையாக அக்டோபரில் வடகிழக்கு மழை குறைவாக பெய்துள்ளது.

3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு:

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நவ.3-ல் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

தமிழ்நாட்டில் நவம்பர் 3ல் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நவ.3-ல் தென்காசி, நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

நவ.4-ல் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

தமிழ்நாட்டில் நவம்பர் 4ல் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் நடப்பாண்டில் இதுவரை வடகிழக்கு பருவமழை 43 சதவீதம் குறைவாக பெய்துள்ளது: பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,northeastern ,Balachandran ,Chennai ,Indian Meteorological Centre South ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...