×

ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் எதிரிபோல் செயல்படுகிறார்; சட்டப்பேரவை செயல்பாட்டை முடக்குகிறார்: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அரசு குற்றச்சாட்டு..!!

டெல்லி: ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் எதிரிபோல் செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

அரசியல் எதிரிபோல் செயல்படுகிறார் ஆளுநர்:

ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் எதிரிபோல் செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அரசு குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றம் தனது கடமைகளை செய்ய ஆளுநர் தடுப்பதாகவும் மனுவில் தமிழ்நாடு அரசு புகார் கூறியுள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தாமதிப்பதன் மூலம் பேரவை செயல்பாடுகளையே ஆளுநர் தடுப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் செயல்பாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அரசமைப்பு சட்டத்தின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது மட்டுமின்றி ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் ஆளுநர் தாமதம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கு தொடர அனுமதி தராமல் தாமதிக்கும் ஆளுநர்:

பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கருக்கு எதிராக ஊழல் வழக்கு பதிவு செய்ய 2022 செப்டம்பரிலேயே அரசு அனுமதி கோரியது. கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே அரசு அனுமதி கோரியும் இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிய கடந்த மார்ச் மாதம் அரசு அனுமதி கோரிய நிலையில் இதுவரை ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநர் செயல்பாடு-டிஎன்பிஎஸ்சி செயல்பாடு பாதிப்பு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பதவி நியமன கோப்புகளையும் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். சரியான காரணங்களை கூறாமல் கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது தவறு என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. ஆளுநரின் தாமதத்தால் டி.என்.பி.எஸ்.சி. செயல்பாடு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்பை அரசு உரிய விளக்கத்துடன் மீண்டும் அனுப்பியபோதும் ஒப்புதல் தர மறுத்துள்ளார்.

ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் என்னென்ன?:

2020-ல் அனுப்பிய 2 மசோதாக்கள் உட்பட 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் நாாமல் ஆளுநர் நிறுவையில் வைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்கு தொடர 2022 செப்டம்பரில் அனுமதி கோரிய நிலையில் இதுவரை ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. பல்கலை. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை.

கைதிகள் முன்விடுதலை தொடர்பான கோப்புகளுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதிக்கிறார். அரசியல் சட்டப்படி ஆற்ற வேண்டிய பணிகளை தமிழ்நாடு ஆளுநர் நிறைவேற்றவில்லை என்று சிட் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதாக கூறப்பட்டுள்ளது. அரசால் அனுப்பப்படும் கோப்புகள், அரசாணைகள், கொள்கை முடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் தாமதிப்பதாகவும், மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஒப்புதல் தர தாமதிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, சட்டப்படி தவறு எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததன் மூலம் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். ஆளுநரின் செயல் தன்னிச்சையானது மற்றும் அர்த்தமற்ற செயல் என மனுவில் தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது. அதிகாரிகளை நியமிக்கும் ஆணைகள், அன்றாட அரசு பணி தொடர்பான கோப்புகளுக்கும் ஆளுநர் ஒப்புதல் தராமல் தாமதம் செய்து வருகிறார்.

அரசியல் எதிரியாக தன்னை முன்னிறுத்துகிறார் ஆளுநர்:

அரசியல் எதிரியாக ஆளுநர் தன்னை முன்னிறுத்துவதாக மனுவில் தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு

“அரசு நிர்வாகத்தை முடக்குகிறார் ஆளுநர்”:

அரசு பணிக்கு ஆள்சேர்க்கும் ஆணைகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது ஊழல் வழக்கு தொடரவும் ஒப்புதல் தரவில்லை. மாநில அரசு நிர்வாகத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் எதிர்மறை போக்கில் ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததன் மூலம் மாநில அரசு நிர்வாகத்தை ஆளுநர் முடக்குவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவை செயல்பாட்டை முடக்குகிறார் ஆளுநர்:

சட்டப்பேரவை தன் கடமையை செய்யவிடாமல் ஆளுநர் அதன் செயல்பாட்டை முடக்குவதாக தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்திருக்கிறது.

The post ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் எதிரிபோல் செயல்படுகிறார்; சட்டப்பேரவை செயல்பாட்டை முடக்குகிறார்: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அரசு குற்றச்சாட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Governor ,Supreme Court ,Delhi ,R. N. ,Ravi ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது;...