×

கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி: கேரளா-நீலகிரி எல்லையில் 11 சோதனை சாவடிகளில் 2வது நாளாக சோதனை

 

ஊட்டி, அக்.31: கேரளா குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கேரள எல்லையில் அமைந்துள்ள 11 மாநில சோதனை சாவடிகளில் மோப்ப நாய் உதவியுடன் 2வது நாளாக வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. கேரளா குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் கேரளா எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, நெல்லை உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், சோதனை சாவடிகளில் தீவிர தணிக்கை மேற்கொள்ள தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் கேரளா- நீலகிரி எல்லையோரத்தில் உள்ள சோலாடி, மண்வயல் உட்பட 11 சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து சோதனை சாவடிகளிலும் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இது தவிர ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரிக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர தணிக்கைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 2வது நாளாக நேற்றும் மோப்பநாய் உதவியுடன் எல்லையோர சோதனை சாவடிகளில் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. புதிதாக அடையாளம் தொியாத நபர்கள் நட மாட்டம் இருப்பது தெரியவந்தால் பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட போலீஸ் தெரிவித்துள்ளது.

The post கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி: கேரளா-நீலகிரி எல்லையில் 11 சோதனை சாவடிகளில் 2வது நாளாக சோதனை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Nilgiri ,Ooty ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...