×

மார்த்தாண்டம் சேக்ரட் ஹார்ட் பள்ளியில் விளையாட்டு தின விழா

மார்த்தாண்டம், அக்.31: மார்த்தாண்டம் ேசக்ரட் ஹார்ட் இன்டர் நேஷனல் பள்ளியில் ஷாலோம் விளையாட்டு தினம் மற்றும் மழலையரின் முதிர் பெற்றோர் தினம் பள்ளி முதல்வர் மணிசுரேஷ் மற்றும் நிர்வாக இயக்குநர் அருள் ததேயுஸ்ராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் சுமித்தா, சஜித் ஜோவந்த் ஆகியோர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் இரண்டாம் வகுப்பு மாணவன் ஹாரீஷ் அஷர் வாழ்த்தி வரவேற்றார். முதிர் பெற்றோர்களின் வழிகாட்டுதல் மழலையர்களை உயர் நிலைக்கு அழைத்து செல்லும் என்ற கருப்பொருளை மையப்படுத்தி பள்ளி முதல்வர் மணிசுரேஷ் வாழ்த்துரை வழங்கினார்.விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், முதிர் பெற்றோர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.முதலாம் வகுப்பு மாணவி ஜோகன்னா நன்றி கூறினார்.

The post மார்த்தாண்டம் சேக்ரட் ஹார்ட் பள்ளியில் விளையாட்டு தின விழா appeared first on Dinakaran.

Tags : Sports Day Festival ,Sacred Heart School ,MARTHAM ,SALOM ,SPORTS DAY ,MATURE ,MARTHAM SACRED HEART INTERNATIONAL SCHOOL ,Dinakaran ,
× RELATED விரிகோடு ரயில்வே கிராசிங் கேட் திறக்க...