×

தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டும் பணி: மேயர் வசந்தகுமாரி அடிக்கல் நாட்டினார்

பல்லாவரம், அக்.31: தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலம், 8வது வார்டு பஜனை கோயில் தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டும் பணியினை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 70 வார்டுகளிலும் அமைக்கப்பட்டுள்ள 9 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் செயல்பாட்டில் உள்ளது. தற்போது, 2ம் கட்டமாக 9 நகர்ப்புற நலவாழ்வு மையங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டலம், 8வது வார்டுக்கு உட்பட்ட பம்மல் பஜனை கோயில் தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில், நகர்ப்புற நலவாழ்வு மையம் புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணியை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.இதனைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி 8வது வார்டில் பழமையான ஜே.எம்.ஏ பள்ளியில் 3 வகுப்பறைகள் கட்டுவதற்கும், 8வது வார்டு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் சத்தியபிரபு தனது சொந்த செலவில் ரூ.4.78 லட்சத்திற்கான காசோலையை எம்எல்ஏ இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் ஆகியோரிடம் வழங்கினார்.நிகழ்ச்சியில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக்குழுத் தலைவர் வே.கருணாநிதி, உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜ், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டும் பணி: மேயர் வசந்தகுமாரி அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Urban Wellness Center ,1st Zone ,Tambaram Corporation ,Mayor ,Vasantakumari ,Pallavaram ,8th Ward Bhajanai Koil Street ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...