×

திருத்தணியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 

திருத்தணி: திருத்தணியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப களப்பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருத்தணி – மாத்தூர் சாலையில் உள்ள திருத்தணி சட்டமன்ற அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப களப்பணியாளர்கள் சங்கம் சார்பில் என்எம்ஆர் பணி வழங்கக் கோரி நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முனிரத்தினம், சேகர், கோபி சந்திரன், பெருமாள், ஏகாம்பரம், புண்ணியமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நெடுஞ்சாலைத் துறையில் விடுபட்டுள்ள என்எம்ஆர் பணியாளர்களுக்கு பணி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

The post திருத்தணியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Tamil Nadu Highway Department Technical Field Workers Association ,
× RELATED போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ரூ.4 லட்சம் மதிப்பிலான 88 மரங்கள் ஏலம்