×

உலக வானியல் வாரம் போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்:பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன

செங்கல்பட்டு: உலக வானியல் வாரம் போட்டிகளில், அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைகழகத்தின் சார்பில் உலக வானியல் வாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில், உலக வானியல் வாரம் சார்ந்து வரைதல், கட்டுரை, எழுதுதல், போஸ்டர் தயாரித்தல், போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இதில், நின்னைக்கரை அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஓவியப் போட்டியில் 7ம் வகுப்பு பில்கேட்ஸ் முதலிடமும், 8ம் வகுப்பு கீர்த்தி ஆசன் இரண்டாமிடமும், கட்டுரைபோட்டியில் 8ம் வகுப்பு மாணவி புவனாஸ்ரீ முதலிடமும், 7ம் வகுப்பு மாணவி பிரதீபா இரண்டாம் இடமும், 7ம் வகுப்பு மாணவி அனுசியா மூன்றாமிடமும், போஸ்டர் தயாரிப்பில் 6ம் வகுப்பு மாணவி பிரகதி முதலிடம் பிடித்தனர்.

இவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களும் கேடயங்களும் எஸ்.ஆர்.எம்.பல்கலைகழக பேராசிரியர்களால் வழங்கப்பட்டது. மேலும், போட்டிகளில் பங்கேற்ற 50 மாணவர்க்கு பங்கேற்பு வழங்கப்பட்டன. இதில், மறைமலைநகர் நகராட்சி நின்னகரை அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சீனி, சந்திரசேகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

The post உலக வானியல் வாரம் போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்:பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன appeared first on Dinakaran.

Tags : World Astronomy Week ,Chengalpattu ,SRM University ,Katangolathur ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா