×

ஸ்கிராப் எடுப்பதில் தகராறு ஊழியர்களை தாக்கிய 5 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் பகுதியில் ஸ்கிராப் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஹெல்மெட்டால் தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் திவ்யன் (37). இவர், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தனியார் தொழிற்சாலையில் மனிதவள மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், திவ்யனும், தொழிற்சாலையில் வேலை செய்யும் ராஜ்குமாரும் கடந்த திங்கட்கிழமை அன்று பைக்கில் செங்கல்பட்டு நோக்கி சிப்காட் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, 2 பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், இவர்களை வழிமறித்து ஹெல்மெட்டால் சரமாரியாக தாக்கி விட்டு சென்றனர். மர்ம நபர்கள் தாக்கியதில் திவ்யனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திவ்யன் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு அருகாமையில் உள்ள சிசிடிவி காட்சிகளை சுங்குவார்சத்திரம் போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், காஞ்சிபுரத்தை சேர்ந்த சதீஷ், செந்தில்குமார், திருவண்ணாமலை மாவட்டத்தை விக்னேஷ், அஜித் ஆகிய 4 பேரை, போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில், சுங்குவார்சத்திரம் பகுதியை சேர்ந்த அசோக் என்பவருக்கும், திவ்யனுக்கும் ஸ்கிராப் எடுப்பதில் முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதனால் இருவரையும் தாக்கியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார், வினோத்தையும் கைது செய்து, ஏற்கனவே கைது செய்யப்பட்ட 4 என மொத்தம் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஸ்கிராப் எடுப்பதில் தகராறு ஊழியர்களை தாக்கிய 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Chungwarchatram ,
× RELATED ராஜிவ் காந்தியுடன் உயிர்நீத்த...