×

டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் முதல்சுற்று: சபலென்கா, பெகுலா வெற்றி

காங்கூன்: மகளிருக்கான உலக தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகளிடையே டபிள்யூடிஏ பைனஸ்ல் டென்னிஸ் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான போட்டி மெக்சிகோவில் உள்ள காங்கூன் நகரில் இந்திய நேரப்படி நேற்று தொடங்கியது. ஒற்றையர் பிரிவில் மொத்தம் 8வீராஙகனைகள் களம் கண்டுள்ள நிலையில் பாகலர் பிரிவில் உள்ள 4 வீராங்கனைகளுக்கான முதல் சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. முதல் ஆட்டத்தில் கஜகிஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா(24வயது, 4வது ரேங்க்), அமெரிக்க வீராங்கனை ஜெசிகா 7-2, பெகுலா(29வயது, 5வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் ஜெசிகா 7-5, 6-2 என நேர் செட்களில் முதல் வெற்றியை பெற்றார். இந்த ஆட்டம் ஒரு மணி 23நிமிடங்களில் முடிந்தது.

அதனையடுத்து பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா(25வயது, 1வது ரேங்க்), கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரி(28வயது, 9வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர். ஒரு மணி 14நிமிடங்களில் முடிந்த இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-0, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் முதல் வெற்றியை பதிவு செய்தார். அதேபோல் மஹாஹுவல் பிரிவுக்கான இரட்டையர் ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனைகளான அமெரிக்காவின் கோரி காஃப், ஜெசிகா பெகுலா ஆகியோர் 6-7(2-6), 3-6 என நேர் செட்களில் கேபரில்லா டப்ரவ்ஸ்கி(கனடா), எரின் ரவுட்லைஃப்(நியூசிலாந்து) இணையிடம் தோற்றது. இந்த ஆட்டம் ஒரு மணி 25நிமிடங்கள் நீடித்தது.

The post டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் முதல்சுற்று: சபலென்கா, பெகுலா வெற்றி appeared first on Dinakaran.

Tags : WTA Finals Tennis ,Sabalenka ,Pegula ,KANGON ,WTA Finals ,Dinakaran ,
× RELATED சபலெங்கா முன்னேற்றம்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா