மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி வேடந்தாங்கல் ஊராட்சியில் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி வேடந்தாங்கல் ஊராட்சியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் தம்பு தலைமை தாங்கினார்.
மாவட்ட கவுன்சிலர் மாலதி, ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் விஜயலட்சுமி கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம் அனைவரையும் வரவேற்றார். இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, திமுக கட்சி கொடியேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார். காஞ்சிபுரம் எம்பி செல்வம் பெண்களுக்கு புடவை மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதேபோன்று மொரப்பாக்கம், கூடலூர், பெரும்பாக்கம், தீட்டாளம், ஊராட்சிகளில், திமுக கட்சி கொடி ஏற்றி புடவை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோருக்கு திமுக நிர்வாகிகளும், கிராம பெண்களும் மலர் தூவி பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்நிகழ்ச்சிகளில், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். மேலும் கரிக்கிலி, கடம்பூர் ஆகிய கிராமங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம், கட்டி முடிக்கப்பட்ட அரசு பள்ளிகளுக்கான சமையல் கூடங்கள் திறக்கப்பட்டன. திமுக செயற்குழு உறுப்பினர் நாராயணன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சசி, நிர்வாகிகள் வேணு, மணி, இளங்கோ, கோபி, சரத்குமார், சீனு நந்தகோபால், சுப்பிரமணி, கலியுக கண்ணதாசன், பிரபாகரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக முன்னோடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post கரிக்கிலி, கடம்பூர் ஊராட்சிகளில் அரசு பள்ளிகளில் சமையல் கூடம்: எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.