×

சோழன் விரைவு ரயிலில் ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.19 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் பறிமுதல்: ரயில்வே போலீசார் நடவடிக்கை

செங்கல்பட்டு: சோழன் விரைவு ரயிலில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த, 26 கிலோ வெள்ளி பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு தினமும் சோழன் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று காலை செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்தடைந்தது.

இந்நிலையில், செங்கல்பட்டு ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக ரயில் பெட்டிகள் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணம் இல்லாமல் பண்ருட்டிக்கு கொண்டு செல்லப்பட்ட கொலுசு, மெட்டி போன்ற 26 கிலோ வெள்ளி பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், ரயிலில் உரிய அனுமதி இல்லாமல் வெள்ளி பொருட்களை கொண்டு சென்ற சென்னை சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த கமலேஷ் (27) மற்றும் லோகேஷ் (24) ஆகிய இருவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்த வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.19 லட்சம் என ரயில்வே போலீசார் தெரிவித்தனர். மேலும், பறிமுதல் செய்த 26 கிலோ வெள்ளி பெருட்களை செங்கல்பட்டு வணிக வரிகள் துறை அதிகாரிகளிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

The post சோழன் விரைவு ரயிலில் ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.19 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் பறிமுதல்: ரயில்வே போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Cholan ,Express ,Chengalpattu ,Cholan express ,Dinakaran ,
× RELATED சென்னை – மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாக புறப்படும்