×

சென்னை புரசைவாக்கத்தில் வங்கி மோசடி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் குற்றவாளி கைது

சென்னை: சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த தெல்மாகரோவின் என்பவருக்கு அடையாளம் தெரியாத கைபேசி எண் 8800422441-இல் இருந்து ஒரு குருஞ் செய்தி உடன் கூடிய லிங்க் httpsippvhnleveraprsio மூலம் அவருடைய India Post Payments Bank (IPPB) வங்கி கணக்குடன் PAN கார்டை update செய்யவேண்டும் என்றும், இல்லை என்றால் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று தெரிவிக்கபட்டிருந்தது. அதை உண்மை என்று நம்பி அந்த link cick செய்து TPB வங்கி விவரங்களையும் OTP யையும் உள்ளீடு செய்துள்ளார். இதனால் அவர் (PPB வங்கி கணக்கில் இருந்து ருபாய் 25,000 அவருடைய அனுமதி இன்றி வேறு ஒருவருடைய வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து அவர் 1830-க்கு கொடுத்த புகார் மீது தலைமையக இணைய வழி குற்ற புலனாய்வு பிரிவு குற்ற எண்: 3/2023 ச பி 420 இநச, 88 D of IT Act இல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புலன் விசாரணையில் எதிரி ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டது. எனவே சஞ்சய்குமார், இணைய வழி குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குனர் அவர்களின் உத்தரவுபடி தெய்வேந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் காவல் ஆய்வாளர் திரு. ஜான் மரிய ஜோசப் மற்றும் 4 காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு எதிரி ஆகாஷ்மண்டல் வயது (21) த.பெ கோவிந்த்மண்டல், மார் கோடி கிராமம், ரட்டபாஹியர் அஞ்சல் காண்டேவட்டம், கிரிடி மாவட்டம், ஊர்கண்ட் மாநிலம் என்பவரை 27.10.2023 அன்று ஜார்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டம் மார் கோடி கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டது.

மேலும் விசாராையில் எதிரி ஆகாஷ்மண்டல் தானும் ஜார்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தை சேர்ந்த தன்னுடைய நண்பன் முகேஷ் மண்டல் அன்பவரும் சேர்ந்து IPPB வாடிக்கையாளர்களை ஏமாற்ற linkஐ குறுஞ் செய்தி மூலம் அனுப்பியதாக ஒப்புக்கொண்டார். மேலும் எதிரியின் கைபேரி மற்றும் sim கார்டு ஆகியகூற்றை அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. எதிரியை கைதி வழிக் காவல் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தொலைபேசி குறுஞ்செய்தி, மின்னஞ்சல், வாட்ஸ் அப் டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடகளையாளுதல்கள் மூலமாக வருகின்ற லிங்குகளை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் மற்றும் OTP – யை பகிர வேண்டாம் எனவும் இணைய வழி குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post சென்னை புரசைவாக்கத்தில் வங்கி மோசடி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Purasaivakam ,Jharkhand State ,CHENNAI ,Thelmakar ,Purasaivakam ,
× RELATED ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் டிவிட்டர் கணக்கு முடக்கம்