×

நவம்பர் 1-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு விநாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

டெல்லி: 89-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், நவம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்திற்கு விநாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. இன்றைய காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் நவம்பர் 1-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவின் படி வழங்க வேண்டிய 13 டிஎம்சி தண்ணீரும், ஏற்கனவே நிலுவையில் இருக்க கூடிய 3 டிஎம்சி தண்ணீரும் என மொத்தம் 16 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கபட்டது.

அதே போல கர்நாடக அரசு சார்பாக ஏற்கனவே நடந்து முடிந்த கூட்டங்களில் முன்வைக்கபட்ட வாதங்காளே கூறப்பட்டது. கர்நாடகவில் தற்போது மழை இல்லாத காரணத்தால் நீர் நிலைகளில் தண்ணீர் பற்றாகுறை ஏற்படுகிறது. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே ஆணையம் உத்தரவிட்டபடி, குறிப்பிட்ட அளவிலான தண்ணீரை திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்புடைய அனைத்து தரவுகளும் ஒப்ப்டைக்கபடும் என தெரிவிக்கபட்டது.

இரு தறப்பு வாதங்களை கேட்ட பின் நவம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்திற்கு விநாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை வழங்கியுள்ளது. இந்த பரிந்துரைய ஏற்க முடியாது என ஏற்கனவே கர்நாடக அரசு தெரிவித்துள்ள நிலையில், இன்றைய கூட்டத்திலும் பரிந்துரைய ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆனையம் தான் இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும்.

The post நவம்பர் 1-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு விநாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Kaviri Organizing Committee ,Tamil Nadu ,Delhi ,89th Caviar Organizing Committee ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...