×

ரவுடி கருக்கா வினோத்தை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி!

சென்னை: ரவுடி கருக்கா வினோத்தை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கிண்டி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். கடந்த 25-ம் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கிண்டி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து, இன்று புழல் சிறை அதிகாரிகள் பலத்த போலீஸ் காவலுடன் கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் 9-வது அமர்வு பொறுப்பு நீதிபதி சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தினர். கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரித்தால்தான் பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதன்படி ரவுடி கருக்கா வினோத்தை நவம்பர் 1-ம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிண்டி போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post ரவுடி கருக்கா வினோத்தை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி! appeared first on Dinakaran.

Tags : SAIDAPET COURT ,RAVUDI KARAKKA VINOOM ,Chennai ,Saithapet ,Rawudi Karuka Vinom ,Karuka Vinotha ,Saithapet Court ,Rawudi Karuka Vinoet ,Dinakaran ,
× RELATED புதிய நீதிமன்றம் தொடக்கம்