×

ஆவினில் தீபாவளிக்காக இதுவரை ரூ.149 கோடிக்கு ஆர்டர் வந்துள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை: ஆவினில் தீபாவளிக்காக இதுவரை ரூ.149 கோடிக்கு ஆர்டர் வந்துள்ளது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆவின் பால் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டை விட 20% அதிகம். இதுவரை ரூ.32 கோடி ஆவின் பொருட்கள் விற்பனையாகி உள்ளன.

பால் கொள்முதலை அதிகரிக்க உற்பத்தியாளர்களுக்கு அதிக எண்ணிக்கையில் மாடுகள் வாங்க கடனுதவி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தீபாவளியை முன்னிட்டு மைசூர்பா, பால் கோவா, நெய், காஜிகட்லி, பிஸ்தா ரோல், முந்திரி அல்வா, மில்க் கேக், நெய் லட்டு உள்ளிட்ட இனிப்புகள் கூடுதலாக தயாரிக்கப்படும். அனைத்து இனிப்பு வகைகளும் அடங்கிய ‘காம்போ பேக்’ஆகவும் விற்பனை செய்யப்படவுள்ளது. தீபாவளி விற்பனையை அதிகரிக்கும் வகையில் ஆவின் பொருட்களை சந்தைப்படுத்த மொத்த, சில்லரை விற்பனையாளர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பால் மற்றும் பால் உபபொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலை மற்றும் சிறந்த தரத்தோடு வழங்கிவரும் ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. ஆவின் தனது பால் உபபொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, மோர், சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம் போன்ற பால் பொருட்களை தரமான முறையில் உற்பத்தி செய்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

கடந்த 2022ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்ட ஆவின் இனிப்பு வகைகள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் கீழ்க்கண்ட தரமான சிறப்பு இனிப்பு வகைகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு, இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

The post ஆவினில் தீபாவளிக்காக இதுவரை ரூ.149 கோடிக்கு ஆர்டர் வந்துள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Avinil Diwali ,Minister ,Mano Thangaraj ,Chennai ,Minister of Dairy Sector ,Dinakaran ,
× RELATED வெகுஜன விரோதியாக உலக மக்களால்...