×

சென்னையில் குடமுழுக்கு நடைபெறாத 100 கோயில்களுக்கு 2025ம் ஆண்டு குடமுழுக்கு நடத்த திட்டம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை மண்டலத்திலுள்ள கோயில்களில் எப்பொழுது குடமுழுக்கு நடந்தது என்று தெரியாமல் இருக்கின்ற 100 திருக்கோயில்களுக்கு 2024 – 2025ம் ஆண்டு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட சுருக்கெழுத்துத் தட்டச்சர்களுக்கு 32 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட சுருக்கெழுத்துத் தட்டச்சர்களுக்கு 32 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இந்த ஆட்சி வந்த பிறகு 240 நபர்களுக்கு இது காலியாக உள்ள பணி இடங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது. அதே போல் 539 நபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இது மட்டும் இல்லாமல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 151 நபர்கள் எதிர்நோக்கப்படுகிறது இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு பணியிணை வழங்கப்படும்.

மேலும் 1278 நபர்கள் 110 விதி கீழ் பணி வரைமுறை செய்யப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி கருணை அடிப்படையில் 100 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது. சென்னை வருவாய் மாவட்டத்தில் உள்ள கோவில்களை கணக்கு எடுத்து எந்த எந்த கோவில்களில் குடமுழுக்கம் நடைபெற வில்லை என ஆய்வு செய்து 2024 – 25 ல் குள் 100 கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளபட்டு குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதே போல் மற்ற வருவாய் மாவட்டங்களிலும் இது போன்று ஆய்வு மேற்கொள்ளப்படும்.

வந்தாரை வாழவைக்கும் தமிழக புண்ணிய பூமி என்பதில் மாற்று கருத்து இல்லை திராவிடத்தால் தான் தமிழகம் வளர்ச்சியுற்றது என்பதை யாரும் மறுக்கமுடியாது இன்று மருத்துவர்கள், பொறியாளர்கள் என்று எங்கு பார்த்தாலும் பற்றாக்குறை இல்லாத காரணம் திராவிடம் தான் ஆகையால் இதை திராவிட பூமி என்று அழைப்பது தவறு இல்லை. சிதம்பரம் நடராஜர் கோயிலில் தவறுகள் நடைபெற இந்த அரசு அனுமதிக்காது. சட்டத்தின் துணையோடு தேவையான நடவடிக்கை அனைத்தும் எடுக்கப்படும்.

யாரு எது சொன்னாலும் அதை கேட்டு அண்ணாமலை அறிக்கை விடுகிறார் அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்மதம் இல்லை. கலாசாரம் மையம் மயிலாப்பூரில் அமைக்கப்படும், எதற்கு எடுத்தாலும் நீதிமன்றம் செல்பவர்கள் இதற்கும் நீதிமன்றம் செல்வார்கள் அதை சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்வோம். அண்ணாமலை போராட்டதூக்கு எல்லாம் பயந்த இயக்கம் இது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னையில் குடமுழுக்கு நடைபெறாத 100 கோயில்களுக்கு 2025ம் ஆண்டு குடமுழுக்கு நடத்த திட்டம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Kudamuzku ,Chennai ,Minister ,P.K.Sekharbabu ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...