×

டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது கூட்டம் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது!

டெல்லி: டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது கூட்டம் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் ஒன்றிய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.

இதற்கிடையில், காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் இன்று (30-10-2023) நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் காணொளியில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில், நவம்பர் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து பரிந்துரை செய்யப்பட உள்ளது.

 

The post டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது கூட்டம் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Cauvery Management Committee ,Delhi ,Vineet Gupta ,Supreme Court ,Dinakaran ,
× RELATED கர்நாடக மாநிலத்தின் கருத்தை...