×

டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர்: சபலென்கா, ஜெசிகா பெகுலா வெற்றி

காங்கூன்: ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் உலக தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தொடர் மெக்சிகோவில் நடக்கிறது. மெக்சிகோவின் 2 நகரங்களின் பெயரில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடக்கிறது. இதில் பாகலர் பிரிவில் சபலென்கா, எலினா ரைபகினா, ஜெசிகா பெகுலா, மரியா சக்கரி, செடுமல் பிரிவில் ஸ்வியாடெக், கோகோ காப், ஓன்ஸ் ஜபீர்,வோண்ட்ருசோவா இடம் பெற்றுள்ளனர். லீக் சுற்றில் தலா ஒருமுறை மோத வேண்டும்.

இதில் 2 பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அதன்படி இன்று காலை நடந்த முதல் போட்டியில், பாகலர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாராசின் 25 வயது அரினா சபலென்கா, 8ம் நிலை வீராங்கனையான கிரீஸ் நாட்டின் 28 வயது மரியா சக்கரி மோதினர். இதில் 6-0,6-1 என எளிதாக அரினா சபலென்கா வெற்றிபெற்றார். தொடர்ந்து அதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் 4ம் ரேங்க் கஜகஸ்தானின் 24வயது எலெனா ரைபகினா-5வது ரேங்க் அமெரிக்காவின் 29 வயது ஜெசிகா பெகுலா மோதினர். இதில் 75-6-2 என ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.

The post டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர்: சபலென்கா, ஜெசிகா பெகுலா வெற்றி appeared first on Dinakaran.

Tags : WTA Finals Series ,Sabalenka ,Jessica Pegula ,Kangon ,WTA Finals ,Jessica Pekula ,Dinakaran ,
× RELATED சபலெங்கா முன்னேற்றம்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா