×

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2030ல் ஜப்பான், ஜெர்மனியை இந்தியா விஞ்சும்: நிதி ஆயோக் தலைவர் தகவல்

புதுடெல்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வரும் 2030ல் ஜப்பான், ஜெர்மனியை விஞ்சும் என்று நிதி ஆயோக் தலைவர் பிவிஆர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பிவிஆர் சுப்பிரமணியம் அளித்த பேட்டியில், ‘அடுத்த மூன்று மாதங்களில் ‘விஷன் இந்தியா@2047’ என்ற ஆவணத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். இந்த தொலைநோக்கு ஆவணத்தில், இலக்கை அடைய தேவையான கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் கோடிட்டு காட்டப்படும். மேலும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், மூலதனம் குறித்தும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களில் உலகளாவிய கூட்டாண்மை பற்றிய விவரங்கள் இருக்கும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 2030-ல் ஜப்பானை விட அதிகமாகும். இதனால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மாறும். 2022-ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு இங்கிலாந்தை விடவும், பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும் அதிகமாக இருந்தது. ஒன்றிய அரசு தயாரித்து வரும் தொலைநோக்கு ஆவணத்தின் முதற்கட்ட முடிவுகளின்படி, 2030-2040ம் ஆண்டுக்கு இடையில் நாட்டின் பொருளாதாரம் 9.2 சதவீதமும், 2040-2047ம் ஆண்டுக்கு இடையில் 8.8 சதவீதமாகவும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2030-2047ம் ஆண்டுக்கு இடையில் 2.5 சதவிகிதம் அளவிற்கு உயரும். இதற்கிடையில், ஆண்டு சராசரி பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் அளவிற்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்கும். இந்தியா தற்போது ​ஐந்தாவது பெரிய பொருளாதார (ஜிடிபி) நாடாக உள்ளது. இந்த ஆண்டு ஜிடிபி 3.7 டிரில்லியன் டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் 2030ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விஞ்சும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2022ல் $3.4 டிரில்லியன் என மதிப்பிடுகிறது. இது 2030ல் $7.3 டிரில்லியனாக அதிகரிக்கும்.

The post மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2030ல் ஜப்பான், ஜெர்மனியை இந்தியா விஞ்சும்: நிதி ஆயோக் தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Japan ,Germany ,Niti Aayog ,New Delhi ,PVR ,
× RELATED இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் :...