×

மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்கள் விடுதலை

சென்னை: மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன் இறங்குதளத்தில் இருந்து கடந்த 1ம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்க 12 மீனவர்கள் சென்றனர். அவர்கள் சென்ற படகு கடந்த 23ம் தேதியன்று தினாது தீவு அருகே இருந்தபோது, மாலத்தீவு கடலோர காவல் படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாலத்தீவு கடற்படையால் கைதான மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், மாலத்தீவு அதிகாரிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரையும், அவர்களது மீன்பிடி படகையும் விடுவித்திட ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் பறிமுதல் செய்த விசைப்படகை விடுவிக்க மாலத்தீவு அரசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே, விசைப்படகை விடுவித்தால்தான் சொந்த ஊர் செல்வோம் எனக் கூறி மீனவர்கள் மாலத்தீவிலேயே உள்ளனர். விசைப்படகையும் சேர்த்து மாலத்தீவு அரசு விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்கள் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Maldivian Coast Guard ,Chennai ,Thoothukudi District, Daruwaikulam ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...