×

கேரள மாநிலத்தில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் நிலை நாட்ட வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் நிலை நாட்ட வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே கலந்தச்சேரி பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கேரள மாநிலத்தில் அமைதி நிலைநாட்டுவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சி தலைவர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன், பாஜக மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ண குமார், முஸ்லிம் லீக் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், கேரள மாநிலத்தில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் நிலை நாட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிலர் கேரள மாநிலத்தில் மத நல்லிணக்கத்தின் பாரம்பரியத்தை தகர்த்துவதற்கு முயற்சி நடப்பதாகவும், தேச விரோத மற்றும் சமூக விரோத செயல்களை ஒன்றுபட்டு தடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்த நிலையில், குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு பினராயி விஜயன் நேரில் செல்கிறார்.

The post கேரள மாநிலத்தில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் நிலை நாட்ட வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Kerala State ,Thiruvananthapuram ,Kerala ,Kochi ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பரபரப்பு; மாணவி வயிற்றில் 2...