×

மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பங்களிடம் வெளியுறவுத்துறை தொடர்பில் உள்ளது: ஒன்றிய அமைச்சர்

டெல்லி: கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் செய்சங்கர் தெரிவித்தார். மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பங்களிடம் வெளியுறவுத்துறை தொடர்பில் உள்ளதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.

உளவு பார்த்த புகாரில் கத்தாரில் கைதான இந்திய கடற்படையில் பல்வேறு பொறுப்பிகளை வகித்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கத்தாரில் இஸ்ரேல் நாட்டுகாக உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கேப்டன் நவ்தேஜ் சிங்க் கில், வீரேந்திர குமார் வர்மா, சவுரவ் வசிஸ்ட், அமித் நாக்பால், புரந்தேடு திவாரி, சுகுணாகர் பகலா, சஞ்சீவ் குப்தா, ராகேஷ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யபட்டுள்ளது.

8 பேரும் கத்தாரில் உள்ள அல் தஹ்ரா நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யபட்டு கத்தாரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டபட்டுள்ளது.

இந்த நிலையில், கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 இந்தியர்களின் குடும்பங்களை சந்தித்துப் பேசியதாக ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பங்களிடம் வெளியுறவுத்துறை தொடர்பில் உள்ளதாகவும், அவர்களின் விடுதலைக்காக அனைத்து நடவடிக்கையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருவதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

The post மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பங்களிடம் வெளியுறவுத்துறை தொடர்பில் உள்ளது: ஒன்றிய அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : State Department ,Union Minister ,Delhi ,Union ,Foreign Minister ,Qatar ,Foreign Ministry ,
× RELATED 2047ம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலர்...