×

ஆந்திராவில் 2 ரயில்கள் மோதிகொண்ட விபத்து எதிரொலி: சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்..!!

சென்னை: ஆந்திர மாநிலம் கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தின் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 2 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கபட்டுள்ளது. ஆந்திராவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவசர உதவு மையங்கள் அமைக்கபட்டு வழக்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஷாலிமார் ரயில் நிலையம் செல்ல கூடிய 3 ரயில்களில் 2 ரயில்கள் ரத்து செய்யபடுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 12 மணிக்கு நேரம் மாற்றபட்டுள்ளது. மாலை மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ஷாலிமார்- பூரி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் இரவு 10.05 மணிக்கு புறப்படும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் என 2 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த நிலையில் ரயில் விபத்தில் சிக்கிகொண்ட உறவினர்கள் குறித்த தகவல் தெரிவிக்க உதவி மையம் அமைக்கபட்டுள்ளது.

The post ஆந்திராவில் 2 ரயில்கள் மோதிகொண்ட விபத்து எதிரொலி: சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Chennai Central ,Chennai ,Kandakapalli railway ,Andhra state, ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் தண்டவாளத்தில் லாரி சிக்கியதால் ரயில் சேவை பாதிப்பு