×

சமூக சீர்திருத்தவாதி முத்துராமலிங்கத்தேவர் வழியில் பயணிப்போம், போற்றுவோம் : அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி!!

சென்னை : முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்தநாள், குருபூஜையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் : தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு, இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மாபெரும் தியாகி பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜை விழா இன்று.சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக முழக்கம், விவசாயிகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் பல்வேறு போராட்டங்கள் என தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்ற சமூக சீர்திருத்தவாதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வழியில் எந்நாளும் பயணிக்க இந்நாளில் உறுதியேற்போம்

திமுக எம்பி கனிமொழி : இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னின்றவரும் சமூக நல்லிணக்கத்திற்குப் பாடுபட்டவருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது அரும்பணிகளை நினைவுகூர்வோம்

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் : தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று முழங்கிய தேசபக்தரும் சுதந்திரப் போராட்ட வீரரும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை அனுப்பியவருமான வீரதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை இன்று.இந்நாளில் அவரது நினைவை போற்றி வணங்குகிறேன்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்: மக்கள் மனதில் நிலைத்திருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் குருபூஜையன்று போற்றி வணங்குகிறேன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி : பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி தினமான இன்று அவருக்கு எங்களது நினைவஞ்சலி

பாமக நிறுவனர் ராமதாஸ் : தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களாலும், அனைத்து அரசியல் கட்சிகளாலும் போற்றப்படும், வணங்கப்படும் பசும்பொன் தேவர் பெருமகனார் அவர்களின் 116-ஆவது பிறந்தநாளும், 61-ஆவது குருபூசையும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரை அனைவரும் போற்றி வணங்குவோம். மக்களுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவரது அணுகுமுறையை அனைவரும் கடைபிடிப்போம்.இந்திய விடுதலைக்காக காங்கிரசின் அங்கமாகவும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சீடராகவும் இருந்து அவர் நடத்திய போராட்டங்கள் வியக்கத்தக்கவை. ஒரு சமூகத்தையே அதன் பிறப்பால் குற்றவாளிகளாக முத்திரைக் குத்தி களங்கப்படுத்தும் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேயர் ஆட்சியிலும், விடுதலை இந்தியாவிலும் போராடி அவர் பெற்ற வெற்றி ஈடு இணையற்றது.தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த நடத்தப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு துணை நின்றது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கியது, தொழிற்சங்க தலைவராக இருந்து தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது என மக்களுக்காக அவர் நடத்திய போராட்டங்களும், பெற்ற வெற்றிகளும் ஏராளம். அனைத்துத் தரப்பு மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகளை இந்த நாளில் மட்டுமின்றி, எந்த நாளும் நினைவு கூர்வோம்; போற்றுவோம்!

 

 

 

The post சமூக சீர்திருத்தவாதி முத்துராமலிங்கத்தேவர் வழியில் பயணிப்போம், போற்றுவோம் : அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி!! appeared first on Dinakaran.

Tags : Muthuramalingtawe ,Chennai ,Muthuramalingath Devi ,Gurupuja ,Muthuramalingtawar ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...